Breaking

Followers

Tuesday, 11 August 2026

2026 தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ்: அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள்!



தமிழ் சினிமாவில் இந்த வருடம் பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி, 2026-ல் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று அதிக வசூல் செய்த முதல் ஐந்து படங்களின் பட்டியலை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

1. ஜனநாயகன் (Jana Nayagan)

  • முதன்மை கதாபாத்திரம்: முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்

  • தயாரிப்புச் செலவு: ₹500 கோடிகள்

  • வசூல் சாதனை: ₹320 - ₹350 கோடிகள்

இந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பது, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம். பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படத்தை, சில அரசியல் காரணங்களால் வெளியிடுவதில் தயாரிப்பு குழுவினருக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டது. ஜனவரி 9 அன்று வெளியிடத் திட்டமிட்டும் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் தள்ளிப்போனது. நீதிமன்றத்தை நாடியும் பலனில்லாததால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரே வெளியிட முடிவெடுத்தனர்.

தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு முழுப் படமும் இணையத்தில் திருட்டுத்தனமாக கசிந்து 1.5 கோடிக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்து பார்த்தனர். இவ்வளவு தடைகளையும் தாண்டி, தேர்தல் முடிந்த பின் ஜூலை 23 அன்று திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளிலேயே ₹88 கோடிகளை வசூலித்து அசத்திய இப்படம், இதுவரை ஒட்டுமொத்தமாக ₹320 முதல் ₹350 கோடிகளுக்கு மேல் வசூலித்து விஜய்யின் பிரம்மாண்டமான மார்க்கெட்டை நிரூபித்துள்ளது.

2. கருப்பு (Karuppu)

  • நடிப்பு: சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி (வில்லன்), மன்சூர் அலிகான், நட்டி நடராஜ், இந்திரன்ஸ்

  • இயக்கம்: ஆர்.ஜே. பாலாஜி

  • வசூல் சாதனை: ₹310 கோடிகளுக்கு மேல்

இரண்டாவது இடத்தில், சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த 'கருப்பு' திரைப்படம் உள்ளது. சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு 'சிங்கம் 2' பாணியில் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி செதுக்கியுள்ளார். இதில் ஆர்.ஜே. பாலாஜி வில்லனாகவும், மன்சூர் அலிகான், நட்டி நடராஜ், மலையாள நடிகர் இந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுமார் ₹130 - ₹140 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ₹310 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

3. பராசக்தி (Parasakthi)

  • நடிப்பு: சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா

  • இயக்கம்: சுதா கொங்கரா

  • வசூல் சாதனை: ₹85 - ₹100 கோடிகள்

மூன்றாவது இடத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி மற்றும் அதர்வா இணைப்பில் வெளியான 'பராசக்தி' படம் உள்ளது. 1960-களில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியடைந்தது. இப்படம் உலகளவில் ₹85 கோடி முதல் ₹100 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

4. பிளாஸ்ட் (Blast)

  • நடிப்பு: அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன்

  • இயக்கம்: சுபாஷ்ராஜ்

  • வசூல் சாதனை: ₹75 கோடிகள்

நான்காவது இடத்தில் 'பிளாஸ்ட்' திரைப்படம் சக்கை போடு போட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் வெறும் ₹18 கோடிகளில் தயாரித்த இந்தத் திரைப்படம், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து உலக அளவில் ₹75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மாபெரும் லாபத்தைக் கொடுத்தது.

5. தாய் கிழவி (Thaai Kizhavi)

  • நடிப்பு: ராதிகா, சிங்கம்புலி, அருள்தாஸ், பாலா சரவணன், முனீஷ்காந்த், இளவரசு

  • தயாரிப்பு: சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்

  • வசூல் சாதனை: ₹72 - ₹80 கோடிகள்

ஐந்தாவது இடத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா முதன்மை வேடத்தில் நடித்த 'தாய் கிழவி' திரைப்படம் உள்ளது. இதில் சிங்கம்புலி, அருள்தாஸ், பாலா சரவணன், முனீஷ்காந்த், இளவரசு போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வெறும் ₹10 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம், குடும்பக் கதையாக உருவெடுத்து ₹72 முதல் ₹80 கோடி வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது.

2026-ன் பிற்பாதியில் வரவிருக்கும் பிரம்மாண்ட படங்கள்:

இதுவரை 2026-ல் வெளியான டாப் 5 படங்களைப் பார்த்தோம். இனிவரும் மாதங்களில் மேலும் பல பெரிய படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன:

  • சர்தார் 2 (கார்த்தி) - செப்டம்பர் ரிலீஸ்

  • ஜெயிலர் 2 (ரஜினிகாந்த் - நெல்சன்) - அக்டோபர் ரிலீஸ்

  • அரசன் (சிம்பு) மற்றும் சேயோன் (சிவகார்த்திகேயன்) - இந்த ஆண்டிற்குள் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளைப் படைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை!

No comments:

Post a Comment