RK Movie Talkies வாசகர்களுக்கு அன்பான வணக்கம்! இன்னைக்கு நம்ம பிளாக்கில், முதலமைச்சர் தளபதி C. ஜோசப் விஜய் அவர்கள் நடித்து வெளிவந்துள்ள அவரோட கடைசி படமான 'ஜன நாயகன்' திரைப்படத்தின் முழுமையான திரைக்கதை அலசலைத்தான் பார்க்கப் போகிறோம்.
H. வினோத் இயக்கத்தில், ராக்ஸ்டார் அனிருத் இசையில், தளபதி விஜய் மிரட்டியிருக்கும் படம்தான் இந்த 'ஜன நாயகன்'. இந்தப் படத்தை KVN Production வெங்கட் K நாராயணா தயாரித்துள்ளார். ஜனவரி 9-ம் தேதி ரிலீஸ் ஆக இருந்த இந்தப் படம், ஒரு சில அரசியல் மற்றும் சென்சார் காரணங்களால் தள்ளிப்போய், ஒரு வழியாக ஜூலை 23-ம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
ஜன நாயகன் கதாபாத்திரங்கள் (Cast & Crew)
கதைக்குள் செல்வதற்கு முன், இந்தப் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரங்களைப் பார்த்துவிடுவோம்:
விஜய் - தளபதி வெற்றி கொண்டான் (TVK)
பாபி தியோல் - ஜான் ஹிம்லர்
பூஜா ஹெக்டே - கயல்
மமிதா பைஜூ - விஜி
பிரகாஷ் ராஜ் - ரோஜா ரங்கசாமி
ஜன நாயகன் படத்தின் கதைக்களம் (Movie Plot)
இந்தப் படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். அதனால் அந்தப் படம் பார்த்த நிறைய பேருக்கு இது என்ன மாதிரி கதை என்று ஏற்கனவே தெரிந்திருக்கும். ஆனால், நம்ம டைரக்டர் வினோத் அந்தப் படத்தின் முக்கியக் கருவை மட்டும் எடுத்து, அதை நம்ம தமிழ் ஆடியன்ஸ்க்கு செட் ஆகும் வகையில் நிறைய மாற்றி, பல காட்சிகளைப் புதிதாக வைத்து செம்மையாக எடுத்து வந்துள்ளார்.
கதையில் புதிதாக ஒன்றுமில்லை. படத்தின் ஹீரோ TVK (விஜய்) ஒரு மலைக் கிராமத்தில் பிறந்து வளர்ந்து போலீசில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றுகிறார். அப்போ அந்த நேரத்தில் டெபுட்டி கமிஷனராக இருந்த பாபி தியோலை ஒரு சில காரணத்துக்காகக் கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போகிறார். ஜெயிலில் அவருக்கு ஒரு நல்ல ஆபீசரின் (கௌதம் வாசுதேவ் மேனன்) நட்பு ஏற்படுகிறது.
அந்த ஆபீசருக்கு ஒரு சின்னப் பெண் இருக்கிறாள், அவள்தான் விஜி (மமிதா பைஜூ). மகளை ராணுவத்தில் (Army) சேர்க்க வேண்டும் என்பது அந்த ஆபீசரின் கனவு. ஆனால், அந்தப் பெண்ணுக்கு ஒரு பிரச்சனை இருந்தது. திடீரென்று எதிர்பாராத சத்தம் கேட்டால் மிகவும் பயந்துவிடுவாள்.
இதன் பிறகு அந்த ஆபீசர் நம்ம ஹீரோவுக்கு ஒரு உதவி செய்கிறார். அந்த காரணத்துக்காக உயர் இடத்திலிருந்து அந்த ஆபீசரை சஸ்பெண்ட் செய்துவிடுகிறார்கள். அவர் சஸ்பெண்ட் ஆகிப் போவதற்கு முன், ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீஸ் ஆகுறவர்கள் பட்டியலில் நம்ம ஹீரோ பெயரையும் சேர்த்துவிட்டுப் போகிறார். அதன் மூலமாக ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகும் ஹீரோ, அந்த ஆபீசரைப் பார்க்க அவருடைய வீட்டிற்குப் போகிறார்.
அங்கு ஆபீசர் தன் மகளை நம்ம ஹீரோவிடம் விட்டுவிட்டு ஒரு வேலை விஷயமாக வெளியே கிளம்புகிறார். அப்படிப் போகும் வழியில் லாரியில் அடிபட்டு, மருத்துவமனையில் இருக்கும்போது ஹீரோவிடம் தன் மகள் விஜி சின்ன வயசில் ஆர்மி டிரெஸில் இருக்கும் ஒரு போட்டோவைக் காட்டிவிட்டு இறந்து போகிறார்.
அதற்குப் பிறகு நம்ம ஹீரோ, அந்தப் பெண் விஜியை எப்படியாவது ட்ரெய்ன் பண்ணி ராணுவத்தில் சேர்த்து விட வேண்டும் என்று போராடுகிறார். அந்த நேரத்தில் வில்லன் மூலமாக விஜிக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்தப் பிரச்சனை பற்றி அலசும்போது அது அந்தப் பெண்ணின் பிரச்சனை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சனை என்று தெரிந்துகொள்கிறார் நம்ம ஹீரோ.
அதற்குப் பிறகு நம்ம ஹீரோ அந்தப் பிரச்சனையை எப்படி சால்வ் பண்ணினார்? விஜியை ராணுவத்தில் சேர்த்தாரா இல்லையா? பாபி தியோல் DC-யில் இருந்து எப்படி வில்லனாக மாறினார்? இதற்கு நடுவில் பிரகாஷ் ராஜ் எப்படி கதைக்கு வருகிறார் என்பதுதான் மீதிக்கதை.
ஜன நாயகன் படத்தின் பிளஸ் பாயிண்ட்டுகள் (Pros)
தளபதி விஜய்யின் மாஸ் பெர்ஃபார்மன்ஸ்: படத்தின் முதலாவது மற்றும் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் நம்மளோட தளபதி விஜய் தான். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு, எமோஷனல் காட்சிகள் எல்லாமே பக்காவாக கனெக்ட் ஆகிறது. அவருக்கான ஒவ்வொரு பிரேமையும் இயக்குனர் வினோத் பார்த்துப் பார்த்து செதுக்கியுள்ளார். எலிவேஷன் சீன், ஃபைட் சீன் எல்லாமே சீன் பை சீன் கொலை மாஸ். தியேட்டரில் TVK கட்சி ரெஃபரன்ஸ் வரும் காட்சிகளுக்கெல்லாம் செம ரெஸ்பான்ஸ்!
H. வினோத்தின் சிறப்பான இயக்கம்: ரீமேக் கதையாக இருந்தாலும் அதை வினோத் கையாண்ட விதம் சிறப்பு. ஒரிஜினலில் இருந்த கிரிஞ்ச் காட்சிகளை நீக்கிவிட்டு, தமிழ் ஆடியன்ஸ்க்கு ஏற்றவாறு மாஸாக மாற்றியுள்ளார். கிளைமாக்ஸில் வரும் RC War கான்செப்ட் சூப்பர். ஷங்கர் சார் மாதிரி தொழில்நுட்பம், அட்லி மாதிரி விஷுவல் ட்ரீட், லோகேஷ் மாதிரி ஆக்ஷன் என வினோத் God Mode-ல் இயக்கியுள்ளார்.
அனிருத்தின் இசை (Music & BGM): அனிருத் மீண்டும் அசுர மோடிற்குப் போய் பாடல்களையும், பின்னணி இசையையும் கொளுத்தி விட்டார். குறிப்பாக இன்டர்வெல் சீனில் வரும் "ராவண மவனடா" BGM தியேட்டரையே அதிர வைக்கிறது.
பொருத்தமான கதாபாத்திரங்கள்: வில்லன்களாக வரும் பாபி தியோல், பிரகாஷ் ராஜ் இருவரும் கிரிஞ்ச் இல்லாமல் டீசன்ட்டாகத் தங்கள் கதாபாத்திரத்தைச் செய்துள்ளனர். மமிதா பைஜூவின் நடிப்பிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது, அவரின் கிளைமாக்ஸ் ஃபைட் சீன் சூப்பர்.
ஜன நாயகன் படத்தின் மைனஸ் பாயிண்ட்டுகள் (Cons)
நீளமான ரன்-டைம் (Duration): படத்தின் முதல் நெகட்டிவ் அதன் நீளம்தான். படம் மொத்தம் 3 மணி நேரத்திற்கு மேல் ஓடுகிறது. ஒரு சில காட்சிகள் ரொம்ப லேகா (Lag) இருக்கிறது. அதை எடிட் செய்து 2.30 மணி நேரமாக மாற்றியிருந்தால் இன்னும் கிரிஸ்பாக இருந்திருக்கும். தளபதி ஃபேன்ஸ்க்கு இது பெரிய குறையாகத் தெரியாவிட்டாலும், காமன் ஆடியன்ஸ்க்கு இந்த லேக் செட் ஆகாது.
பழக்கப்பட்ட கதைக்களம்: விஜய்யின் கடைசிப் படம் என்பதால் கொஞ்சம் வித்தியாசமான, புதுமையான கதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். இது ஒரு ரீமேக் படம் என்பதால் சமூக வலைத்தளங்களில் கொஞ்சம் ட்ரோல் செய்யப்படுகிறது. அரசியல் வருகையை மையமாக வைத்து 'முதல்வன்' போன்ற ஒரு வலுவான கதையில் நடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
இறுதித் தீர்ப்பு (Final Verdict)
'ஜன நாயகன்' அவ்வளவு மோசமான படம் இல்லை. இது ஒரு 'A' சர்டிபிகேட் படம் என்பதால் குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாது என்றாலும், ஒரு நல்ல சமூகக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.
விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடுகிறார்கள். பல திறமைகளைக் கொண்ட ஒரு நடிகர் சினிமாவை விட்டுப் போவது தமிழ் சினிமாவுக்கே ஒரு பெரும் பின்னடைவு என்பது கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கிறது.
மொத்தத்தில், விஜய் ரசிகர்களுக்கும், ஆக்ஷன் விரும்பிகளுக்கும் 'ஜன நாயகன்' தியேட்டரில் சென்று பார்க்க வேண்டிய ஒரு தரமான சம்பவம்! ---



No comments:
Post a Comment