ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயடு லோகர் நடிப்பில் வெளிவந்து, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்ற ஹாரர் த்ரில்லர் படம்தான் இம்மோட்டல் (Immortal). உண்மையாவே இந்தப் படம் நல்லா இருக்குதா? இந்தப் படத்தோட பட்ஜெட் மற்றும் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் என்ன, இந்தப் படம் ஹிட்டா ஃப்ளாப்பா அப்படின்னு விவரமா பாப்போம் வாங்க.
ஏ.கே ஃபிலிம் பேக்டரி அருண்குமார் தனசேகரன் தயாரிச்சிருக்கிற இந்தப் படத்துல, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் நாயகனாகவும், கயடு லோகர் நாயகியாகவும் நடிச்சிருக்காங்க. இவங்களோட சேர்ந்து லொள்ளு சபா மனோகர், குமார் நடராஜன், கார்த்திக், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை மாரியப்பன் சின்னா இயக்கியிருக்காரு. இது இவரோட முதல் படம், இயக்குனரா தமிழ் சினிமாவுக்கு இந்தப் படம் மூலம் அறிமுகமாகியிருக்காரு மாரியப்பன் சின்னா.
படத்தின் கதைக்களம்
இந்தப் படத்தோட கதையைப் பற்றி பார்த்தோம்னா, படத்தோட ஆரம்பத்துல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பழங்குடி தம்பதியைக் காட்டுறாங்க. அந்தப் பழங்குடிப் பெண்மணி கர்ப்பிணியாக இருக்கிறார். சில நாள் கழித்து அந்தப் பெண்மணிக்கு குழந்தை பிறக்குது. புதுசா பிறந்த அந்தக் குழந்தையைப் பார்த்ததும் அந்தத் தம்பதிக்கு ஒரே அதிர்ச்சி. அந்தக் குழந்தை பிறக்கும்போதே ஒரு அமானுஷ்யக் குழந்தையாதான் பிறக்குது.
இந்தக் குழந்தையை இப்பவே கொன்னுட்டா எந்தப் பிரச்சனையும் வராது, ஒருவேளை இந்தக் குழந்தை பெரியவனா ஆகிட்டா பின்னாடி பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அப்படின்னு நினைச்சு, ரொம்ப மன வலியோட அந்தக் குழந்தையைக் கொண்டு போய் ஒரு பாறை மேல வைக்கிறார் அந்தக் குழந்தையோட அப்பா. அப்போ அந்தப் பக்கமா ஒரு நரி வருது, அந்த நரியும் மெல்ல குழந்தை பக்கம் போகுது, அந்தக் குழந்தையோட அப்பாவும் திரும்பிப் பார்த்துட்டு ஒரு பெரிய ஏக்கத்தோட அப்படியே போயிடறாரு.
அதுக்கப்புறம் அப்படியே கட் பண்ணிட்டு, கதை சென்னைக்கு மூவ் ஆகுது. சென்னையிலதான் நம்ம ஹீரோ ஜி.வி. பிரகாஷ் என்ட்ரி. அவரோட மாமாவோட பிரின்டிங் கடையில வேலை பார்த்துகிட்டு, தங்குறதுக்கு ஒரு நல்ல வீடு தேடிக்கிட்டு இருக்காரு. இவருக்கு வீடு வேணும்னா ஒரு கண்டிஷன் இருக்குது. அதாவது, அவர் குடிபோற வீட்டுக்கு பக்கத்து வீட்லயோ சரி, எதிர் வீட்லயோ சரி... ஏதாவது ஒரு பொண்ணு இல்லனா ஆன்ட்டி இருக்கணும். அப்படி இருந்தால்தான் அந்த வீட்டுக்கு இவர் போவாரு. சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் ஒரு பிளேபாய் ரோல் பண்ணியிருக்கிறார்.
இந்தக் காரணத்தினாலேயே இவரு ஆசைப்படுற மாதிரி எந்த ஒரு வீடுமே இவருக்கு அமையல. நாட்கள் அப்படியே நகருது, ஜி.வி. பிரகாஷ் அடிக்கடி ஒவ்வொரு வீட்டுக்கா போயி வீடு வாடகைக்கு கிடைக்குமா அப்படின்னு தேடிக்கிட்டே வராரு. அவர் இப்போ தங்கியிருக்கிற வீட்டு ஓனரும் வீட்டை டெவலப் பண்ணனும், அதனால உடனடியாக காலி பண்ணுன்னு பிரஷர் கொடுத்துக்கிட்டு இருக்காரு. ஜி.வி. பிரகாஷும் உடனே காலி பண்றேன் அப்படின்னு ஹவுஸ் ஓனரை சமாளிச்சுட்டு போன கட் பண்ணிட்டாரு.
அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு ஜி.வி. பிரகாஷ் போனுக்கு ஒரு கால் வருது. அந்தக் காலுல "நீங்க ரொம்ப நாளா வீடு தேடிக்கிட்டு இருக்கீங்க, எங்க கிட்ட ஒரு வீடு இருக்குது. மாசம் 5000 ரூபாய் வாடகை, நீங்களும் நானும் ஷேர் பண்ணிக்கலாம். நீங்க வந்து வீட்டைப் பாருங்க, பிடிச்சிருந்தா ஷிப்ட் (Shift) ஆகுங்க" அப்படின்னு ஒரு லேடி சொல்றாங்க. இதைக்கேட்ட ஜி.வி. பிரகாசுக்கு ஒரே குஷி! கடைசில இவர தேடிக்கிட்டு இருந்த மாதிரி ஒரு வீடும், அதே வீட்டில் ஒரு பெண்ணும் இருக்கிறதை நினைச்சுக்கிட்டு செம ஜாலியா அந்த வீட்டைப் பாக்கப் போறாரு.
மாயங்களும் மிரள வைக்கும் திருப்பங்களும்
அந்த வீட்டுக்குப் போய் காலிங் பெல் அடிக்கவும் வீட்டு கதவு திறக்குது, அப்பதான் கயடு லோகர் என்ட்ரி! ஜி.வி. பிரகாஷ் கயடு லோகரைப் பார்த்ததும் அவங்களோட அழகுல மயங்கிப் போறாரு. அதுக்கப்புறமா வீட்டைச் சுத்தி பார்த்துட்டு நான் இன்னைக்கே இந்த வீட்டுக்கு ஷிப்ட் ஆகுறேன் அப்படின்னு சொல்றாரு.
அதுக்கப்புறம் அந்த வீட்டில நைட் ஆனா ஒரு சில அமானுஷ்ய விஷயங்கள் எல்லாம் நடக்கிறதைப் பார்த்துட்டு ஜி.வி. பிரகாசுக்கு சந்தேகம் வருது. ஜி.வி. பிரகாஷ் என்னெல்லாம் நினைக்கிறாரோ அது எல்லாத்தையும் கயடு லோகர் பண்ணிக் கொடுக்குறாங்க. ஜி.வி. பிரகாஷ் பிரியாணி கேட்டா பிரியாணி கிடைக்குது, சிகரெட் கேட்டா சிகரெட் கிடைக்குது. அதுக்கப்புறம் விளையாட்டா ஒருநாள் பைக் ஒன்னு வாங்கித் தரச் சொல்லிக் கேட்கிற நேரம், அடுத்த நாளே அந்த வீட்டுப் பார்க்கிங்ல புது பைக் ஒன்னு நிக்கும். இதெல்லாம் பாக்குற நேரம் ஜி.வி. பிரகாசுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்.
அதுக்கப்புறம் ஜி.வி. பிரகாஷ் கயடு லோகரோட சேர்ந்து டிவி பார்த்துகிட்டு இருக்கிற நேரம், பின்னால இருந்து ஒரு வயசான மனுஷன் எழும்புவாரு. இதப் பார்த்தா ஜி.வி. பிரகாஷ் ரொம்ப பயந்து போய் கயடு லோகர் கிட்ட இது யாருன்னு கேக்குறாரு. அதுக்கு அவங்க, அது தன்னோட தாத்தா அப்படின்னு சொல்றாங்க. ஆனா அது உண்மையாவே அவங்களோட தாத்தா கிடையாது. அந்த தாத்தா அப்படின்னு சொன்னவரோட பேரு ஆகாஷ்.
ஆகாஷ் ஒரு நாள் ஜி.வி. பிரகாஷ் கிட்ட, "இங்க இருந்து எப்படியாவது போ, இப்ப நீ இருக்கிறது ஒரு மனுஷன் கூட இல்ல, அந்தப் பொண்ணு மனுசியே கிடையாது" அப்படின்னு சொல்றாரு. இதைக் கேட்ட ஜி.வி. பிரகாஷ் ஆரம்பத்துல இதை நம்பலனாலும், போகப் போக நடக்குற ஒவ்வொரு விஷயத்துகளால அது உண்மையா இருக்கும்னு புரிஞ்சிக்கிறாரு.
அதுக்கப்புறம் அவசரமா ஒரு வேலை இருக்கு, நான் போயிட்டு சாயந்திரம் வந்துடுறேன் அப்படின்னு சொல்லிட்டு அங்கிருந்து தப்பிச்சுப் போறதுக்கு முயற்சி செய்றாரு ஜி.வி. பிரகாஷ். கயடு லோகரும் ஜி.வி. பிரகாஷ் கிட்ட போயிட்டு வரச் சொல்லி அனுப்பி வைக்கிறாங்க, ஜி.வி. பிரகாஷும் பைக் எடுத்துட்டு வெளியே கிளம்புகிறார். அப்படியே பைக் எடுத்துக்கிட்டு போயிட்டு இருக்குற நேரம் கயடு லோகர் கிட்ட இருந்து கால் வருது. அந்தக் கால் அட்டென்ட் பண்ணி ஜி.வி. பிரகாஷ் கயடு லோகரைத் தாறுமாறா திட்றாரு. திட்டிட்டு போன வச்சிட்டு கிளம்புவதற்கு ரெடி ஆகிற நேரம் ஜி.வி. பிரகாசுக்கு பெரிய அதிர்ச்சி காத்துகிட்டு இருக்கு. அதாவது அந்த இடமே கயடு லோகர் கட்டுப்பாட்டில் இருக்கிற ஒரு மாயமான, அமானுஷ்யம் நிறைந்த இடம். இதைப் பார்த்து ஆடிப் போறாரு ஜி.வி. பிரகாஷ்.
இதுக்கப்புறம் என்ன நடந்தது? ஜி.வி. பிரகாஷ் எப்படி அங்கிருந்து தப்பிச்சாரு? கயடு லோகர்க்கும் ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி பிறந்த அந்த அமானுஷ்யக் குழந்தைக்கும் நடுவுல என்ன தொடர்பு இருக்குது? அப்படின்றதைப் பற்றி சொல்லப் போறதுதான் படத்தோட மீதி கதை.
படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ் (Plus & Minus)
அடுத்து இந்தப் படத்துல இருக்கிற பிளஸ் மற்றும் மைனஸ்களைப் பற்றி பார்ப்போம். இந்தப் படத்தோட பிளஸ் அப்படின்னு பார்த்தோம்னா முதலாவது மைண்டுக்கு வர்றது கயடு லோகர் தான். இந்தப் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது கயடு லோகர் தான். தமிழ் சினிமாவுல தற்போது உள்ள முன்னணி நடிகைகளுக்கு சவால் கொடுக்கக்கூடிய ஒரு நடிகைதான் கயடு லோகர். இளைஞர்கள் மத்தியில் அவர்களின் கனவு தேவதையாகவும் வலம் வருகிறார். இவர் இந்தப் படத்துல நடிச்சது இளைஞர்கள் இந்தப் படத்தைத் தேடி திரையரங்கை நோக்கிப் படையெடுக்கக் காரணமா அமைந்தது.
அடுத்தபடியாக இந்தப் படத்தின் காமெடி காட்சிகள் மிகவும் அருமையாக இருந்தது. குறிப்பாக லொள்ளு சபா மனோகர், அவரது காமெடி காட்சிகள் பிரமாதமாக இருந்தது.
இதனைத் தவிர்த்து இந்தப் படத்தில் பிளஸ் பாயிண்ட்கள் இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால், இந்தப் படத்தின் திரைக்கதை வடிவமைப்பைச் சரியாகக் கையாளத் தவறிவிட்டார் இயக்குனர் மாரியப்பன் சின்னா. மோசமான ரைட்டிங் மற்றும் தவறான நடிகர்கள் தேர்வு என்பவற்றில் கோட்டை விட்டுள்ளார் இயக்குனர். இந்தப் படத்தின் கதை 'அம்புலி' படக் கதையின் சாயல்தான். இருந்தாலும் திரைக்கதைக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
அடுத்ததாக நாயகன் ஜி.வி. பிரகாஷ் உடைய நடிப்பு செயற்கைத்தனமாக அப்பட்டமாக விளங்குகிறது. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் பொருத்தமே இல்லை என்றுதான் கூற வேண்டும். அடுத்து இந்தப் படத்தில் கயடு லோகர் உடைய கவர்ச்சியை மட்டுமே நம்பி இருந்தது போல் தோன்றுகிறது. கயடு லோகர் உடைய கவர்ச்சிக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு காலத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் என நடிகர்களை நம்பிப் படம் பார்த்த கூட்டம், இன்று நடிகைகளின் கவர்ச்சிக்காகத் திரையரங்கை நோக்கியே படையெடுக்கத் தொடங்கியுள்ளது.
அடுத்து இந்தப் படத்தின் மட்டமான கிராபிக்ஸ்! கதை மற்றும் திரைக்கதையில் சொதப்பி இருந்தாலும், தரமான கிராபிக்ஸ் பயன்படுத்தி ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டினை கொடுத்திருக்கலாம். ஆனால் அங்கும் மட்டமான கிராபிக்ஸைப் பயன்படுத்தி ரசிகர்களின் பொறுமையை இந்தப் படம் ரொம்ப சோதித்தது.
இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைச்சிருக்காரு. பாடல்கள் பெருசா ஹிட் ஆகல, இருந்தாலும் பின்னணி இசை இந்தப் படத்தைக் கொஞ்சம் தூக்கிப் பிடிக்குது.
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் மற்றும் ரேட்டிங்
அடுத்து இந்தப் படத்தோட மொத்த பட்ஜெட் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இருந்தாலும் இந்தப் படம் 4.51 கோடிகள் வசூல் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்னதான் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் IMDb 9.2 ரேட்டிங் கொடுத்திருக்காங்க. மொத்தத்துல இந்தப் படத்துக்கு U சர்டிபிகேட் கொடுத்திருந்தாலும், இந்தத் திரைப்படம் குடும்பத்தோட சேர்ந்து பார்க்கக்கூடிய படம் கிடையாது. இந்தப் படத்துல நிறைய கவர்ச்சிக் காட்சிகள் உள்ளது. இருந்தாலும் ஹாரர் த்ரில்லர் படம் பார்க்க விரும்புபவர்களுக்கு இந்தப் படம் நல்ல விருந்தாக அமையும்.
இதுபோன்ற சினிமா செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள ஆர்.கே மூவி டாக்கிஸ் தளத்தை ஃபாலோ செய்யுங்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக