RK Movie Talkies வாசகர்களுக்கு அன்பான வணக்கம்! இன்னைக்கு நம்ம பிளாக்கில், நெட்பிளிக்ஸ் (Netflix)-ல் சமீபத்தில் வெளியாகியுள்ள "கான் சிட்டி" (Con City) திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை பற்றிய முழுமையான அலசலைத்தான் பார்க்கப் போகிறோம்.
ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒரு தரமான மணி ஸ்கேமிங் த்ரில்லர் (Money Scamming Thriller) படம்தான் இந்த 'கான் சிட்டி'. இந்தப் படத்தை பாரத் துரைராஜ் தயாரித்துள்ளார். அர்ஜுன் தாஸுடன் இணைந்து யோகி பாபு, வடிவுக்கரசி, அன்னா பென், ராதா ரவி, சாக்ஷி வைத்யா, விடிவி கணேஷ், இமான் அண்ணாச்சி என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்திருக்கிறது.
கான் சிட்டி படத்தின் கதைக்களம் (Movie Plot)
படத்தின் ஆரம்பத்தில், அர்ஜுன் தாஸ் ஒரு சிறிய உணவகம் (Hotel) நடத்தி வருவதாகக் காட்டுவார்கள். அர்ஜுன் தாஸுடன் படத்தின் கதாநாயகி அன்னா பென் மற்றும் அவர்களின் சிறிய மகன் ஜீவனும் அந்த ஹோட்டலில் இருக்கிறார்கள். ஒரு நாள் ஜீவனைப் பள்ளியில் (School) விட்டுவிட்டு, மாலை பிக்கப் செய்ய வர அர்ஜுன் தாஸ்க்கு கொஞ்சம் தாமதமாகிவிடுகிறது.
அவசர அவசரமாகப் பள்ளிக்குச் சென்று பார்த்தால் ஜீவன் அங்கே இல்லை. ஜீவனை யாரோ கூட்டிட்டுப் போயிட்டாங்கன்னு பள்ளியில் வேலை பார்ப்பவர் சொல்ல, சிசிடிவி (CCTV) கேமரா மூலமாகச் செக் பண்ணிப் பார்க்கிறார்கள். அதில் ஜீவனை ஒருத்தர் கூட்டிட்டுப் போறதைப் பார்த்து நம்ம ஹீரோ, ஹீரோயின், யோகி பாபு என எல்லோரும் அதிர்ச்சியடைகிறார்கள்.
சுவாரஸ்யமான கடந்த காலக் கதை (Flashback)
அந்தக் காட்சியை அப்படியே கட் பண்ணி, கடந்த காலக் கதைக்குள் (Flashback) கொண்டு போகிறார்கள். கடந்த காலத்தில், அர்ஜுன் தாஸ் மின்சார வாரியத்தில் வேலை செய்யும் ஒரு சாதாரண பேச்சிலர். அர்ஜுன் தாஸின் பள்ளி நண்பன், ஒரு டிரேடிங் (Trading) கம்பெனியில் வேலை பார்க்கிறார். அவர் அர்ஜுன் தாஸிடம் டிரேடிங் பண்ணி நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று ஒரு ஐடியா சொல்கிறார். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை பணம் வேண்டும் என்று கேட்கிறார்.
ஆனால் அர்ஜுன் தாஸிடம் அந்த அளவுக்குப் பணம் இல்லை. பணம் எங்கே வாங்கலாம் என்று யோசிக்கும்போது நம்ம ஹீரோவுக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. மின்சார வாரியத்தில் மாசம் மாசம் மின்சாரக் கட்டணம் செலுத்த மக்கள் வருவார்கள். அவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, பில் கொடுக்கும் பிரிண்டிங் மெஷின் உடைந்துவிட்டது என்று பொய் சொல்லி, அங்கே வேலை பார்ப்பவர்களை ஏமாற்றி, கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தை எடுத்துத் தன் நண்பனிடம் கொடுக்கிறார்.
அப்படியே அர்ஜுன் தாஸ், பணம் முதலீடு செய்யும் ஒரு போலியான (Fake) கம்பெனி ஒன்றைத் தொடங்கி, மக்கள் கிட்ட 20% வட்டி வரும் என்று பொய் சொல்லி, அவர்களை அதில் பணம் முதலீடு செய்ய வைத்து, அதில் வரும் பணத்தை எல்லாம் எடுத்துத் தன் நண்பனிடம் டிரேடிங் செய்வதற்காகக் கொடுக்கிறார்.
இணைந்த மற்றவர்களின் கதைகள்
இதற்கு அடுத்து நம்ம ஹீரோயினோட கடந்த காலக் கதையைக் காட்டுறாங்க. ஹீரோயின் ஒரு கம்பெனியில் பணம் முதலீடு செய்திருப்பார்கள். ஆனால் அது ஒரு மோசடி (Scam) கம்பெனி, அவர்கள் பணத்தை மொத்தமாக ஏமாற்றிவிட்டுப் போயிருவார்கள். வீட்டுக்குத் தவணை (EMI) கட்ட முடியாமல் இருக்கும்போதுதான், அவங்களும் இனிமேல் மக்களை ஏமாற்றலாம் என்று முடிவு பண்ணி, "ஸ்டாண்டர்ட்" அப்படின்னு ஒரு போலியான கம்பெனி ஒன்றைத் தொடங்கி, அது மூலமா வரும் பணத்தை நம்ம ஹீரோ அர்ஜுன் தாஸின் கம்பெனியில் முதலீடு செய்கிறார்கள்.
அடுத்து நம்ம யோகி பாபு மற்றும் வடிவுக்கரசி அவர்களின் கதை வருகிறது. யோகி பாபுவுக்கு எப்படியாவது சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று ஆசை. அவரோட அம்மா வடிவுக்கரசிக்குக் கேன்சர் இருக்கிறது, ஆபீரேஷன் பண்ண பல லட்சம் ரூபாய் செலவாகும். பணத்துக்கு என்ன பண்றதுன்னு தெரியாமல் இருக்கும்போது ஒரு நாள் ஃபேஸ்புக்கில், "அம்மாவுக்கு கேன்சர் உதவி பண்ண, இந்த வங்கி கணக்குக்கு காசை போடுங்க"ன்னு ஒரு விளம்பரம் கொடுக்கிறார்.
அது மூலமா நிறைய பணம் அவர்களுக்கு வருகிறது. அதை எடுத்துக்கிட்டு ஹாஸ்பிடல் போக, டாக்டர் "உங்க அம்மாவோட ரிப்போர்ட்ட பார்த்தேன், அவங்களுக்கு ஆபரேஷன் பண்ண தேவையில்லை, அவங்க நல்லா இருக்காங்க"ன்னு சொல்கிறார். வந்த பணத்தை யாருக்காவது திருப்பிக் கொடுத்துவிடுவோம் என்று யோகி பாபு சொல்ல, அம்மா "வேண்டாம், நாம ஒரு டிரஸ்ட் (Trust) ஸ்டார்ட் பண்ணி லட்ச லட்சமா சம்பாதிக்கலாம்"ன்னு சொல்கிறார். இவங்க ரெண்டு பேரும் இந்த டிரஸ்ட் மூலமா வரும் பணத்தை நம்ம ஹீரோவோட கம்பெனியில் முதலீடு செய்கிறார்கள்.
திருப்பங்களும், அதிர்ச்சியும் (The Twist)
இந்த நேரத்தில் ஹீரோவோட இன்னொரு நண்பர் சபரி, "ஒரு டீலிங்ல 10 கோடி ரூபாய் பணம் போட்டா, 2 நாள்ல 15 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்" ஆனா அவர்கிட்ட பணம் இல்லைன்னு ஹீரோவிடம் சொல்கிறார். ஹீரோ அவரோட நண்பன் சபரிக்கு 10 கோடி ரூபாய் தரேன்னு சொல்லி, டிரேடிங் பண்ணுற நண்பன் கிட்ட இருந்து பணத்தை வித் டிரா பண்ணி சபரி கிட்ட கொடுக்கிறார்.
சபரியும் அந்தப் பணத்தை வாங்கிட்டுப் போகிறார். அடுத்த நாள் ஹீரோவுக்கு ஒரு கால் வருகிறது. என்னவென்று பார்த்தால் சபரியை யாரோ கொலை பண்ணிட்டாங்க. பணமும் போயிருச்சு, மக்கள் கிட்ட வாங்குன பணத்தை எப்படி திருப்பி கொடுக்கிறதுன்னு புலம்புறாரு.
இதற்கு அடுத்து, பணத்தை முதலீடு செய்த மக்கள் போலீஸில் புகார் கொடுக்கிறார்கள். போலீஸ் இவங்க நாலு பேரையும் கைது செய்கிறார்கள். விசாரிக்கும்போது, ஹீரோ போலீஸ் ஒருத்தரை அடிச்சிட்டு அங்கே இருந்து தப்பிச்சுப் போகிறார். தப்பிச்சு வேற ஒரு மாநிலத்துக்குப் போய், ஹோட்டல் ஆரம்பிச்சு வேலை செய்றாங்க. இதுதான் படத்தின் ஆரம்பக் காட்சி.
ஃபிளாஷ்பேக் முடிஞ்சு, பிரசென்ட் சீனுக்கு கதை வரும்போது, ஜீவனை யாரோ கூட்டிட்டுப் போறாங்கன்னு சிசிடிவில செக் பண்ணும் போது, அதைச் செக் பண்ணும் போது, ஜீவனை கூட்டிட்டுப் போறது நாலு பேரையும் கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாண சுந்தரம் தான் என்பது தெரிகிறது. இதற்கப்புறம் இவங்க ஜீவனை காப்பாத்துனாங்களா? கல்யாண சுந்தரம் எதுக்கு இப்போ வந்து இருக்காரு? சபரி எப்படி செத்தாருன்னு பல ட்விஸ்ட்டோட வரப்போறதுதான் மீதிக்கதை.
கான் சிட்டி படத்தின் பிளஸ் பாயிண்ட்டுகள் (Pros)
விறுவிறுப்பான திரைக்கதை: இந்தப் படத்தைப் பொறுத்தவரை திரைக்கதையில் (Screenplay) சூப்பரா பண்ணிருக்காரு இயக்குனர் ஹரிஷ் துரைராஜ். கொஞ்சம் கூட லேக் (Lag) இல்லாம, சலிப்புத் தட்டாம விறுவிறுப்பா கதையை கொண்டு போயிருக்காரு. அடுத்தது என்ன? அடுத்தது என்ன? அப்படின்னு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் திரைக்கதை இருக்கிறது.
அர்ஜுன் தாஸின் நடிப்பு: அர்ஜுன் தாஸின் நடிப்பு, மனுஷன் பொதுவா வில்லன் ரோல செமையா பண்ணுவாரு. இந்த படத்துல ஹீரோவா செட் ஆகுவாரா அப்படின்ற பயம் இருந்தது, ஆனா நடிப்பில் பின்னி எடுத்துட்டாரு அர்ஜுன் தாஸ். ஹீரோவுக்கான ஸ்வாக் எல்லாமே பக்காவா செட் ஆகுது.
யோகி பாபு & விடிவி கணேஷின் காமெடி: யோகி பாபு தனக்கான ரோல கொஞ்சம் கூட பிசிறு தட்டாம செமையா பண்ணிருக்காரு. விடிவி கணேஷோட காமெடி எல்லாம் சூப்பர், அதுலயும் ஈபி (EB) ஆபீஸ்ல வர்ற ஒரு சில கவுண்டர் காமெடி எல்லாம் வேற லெவல்.
கான் சிட்டி படத்தின் மைனஸ் பாயிண்ட்டுகள் (Cons)
பின்னணி இசை (Background Score): படத்தோட பின்னணி இசை கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது. சீன் ரோல்டன் இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணிருக்கலாம்னு தோணுது. பாடல்களும் பெருசா ஹிட் ஆகல. ஒரு ராபரி கான்செப்ட் (Robbery Concept) படத்துல பிஜிஎம் (BGM) தரமா இருக்கணும், அது இந்த படத்துல மிஸ்ஸிங்.
இறுதித் தீர்ப்பு (Final Verdict)
இந்த படத்துக்கு ஐஎம்டிபி (IMDb) ரேட்டிங் 7.2/10 கொடுத்திருக்காங்க. இது ஒரு நல்ல ரேட்டிங் தான். பொதுவா இந்த மாதிரி சின்ன பட்ஜெட் படங்களை யாரும் பெருசா தியேட்டர்ல போய் பார்க்க மாட்டாங்க. ஆனா தியேட்டர்ல போய் பார்த்து இருக்க வேண்டிய தரமான படம்தான் இந்த "கான் சிட்டி".
தியேட்டர்ல இந்த படத்தை பார்க்க மிஸ் பண்ணவங்களுக்கு நெட்பிளிக்ஸில் இந்த படத்தை பார்க்க முடியும். கண்டிப்பா பாருங்க, ஹாலிவுட் தரத்துல ஒரு ஸ்கேம் த்ரில்லர் படம் பார்த்த ஃபீல் கிடைக்கும்!



No comments:
Post a Comment