Breaking

Followers

Thursday, 13 August 2026

பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் DC: படம் எப்படி இருக்கு? முழு திரைப்பட விமர்சனம் இதோ!


 சன் பிக்சர்ஸ் நிறுவனத்தோட தயாரிப்புல அருண் மாதேஸ்வரன் இயக்கத்துல அனிருத் ரவிச்சந்தரோட மிரட்டலான இசையில ஆகஸ்ட் 7ம் திகதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதல் முதலா ஹீரோவா நடித்து வெளி வந்து பாக்ஸ் ஆபீஸ்ல சக்கைப்போடு போட்டுக்கிட்டு இருக்க படம்தான் DC.

படத்தோட கதை

இந்தப் படத்தோட கதை என்னன்னு பார்த்தோம்னா, படத்தோட ஹீரோ தாஸ் (லோகேஷ்) மற்றும் அவரோட கேங் ஒரு பெரிய ஸ்மக்லிங் பண்றாங்க. அதாவது அரசாங்கத்துக்கு சொந்தமான துப்பாக்கி மாதிரி பெரிய பெரிய வெப்பன்ஸ் எல்லாம் கொள்ளையடிக்கிறாங்க.

அந்த சம்பவத்துல ஒரு குடும்பம் பாதிக்கப்படுது. அதாவது அந்த பாதிப்பு எப்படி ஏற்படுதுன்னா, அந்த ஸ்மக்லிங் கேஸை கண்டுபிடிக்கிறதுக்கு போலீஸ் செக் போஸ்ட் போட்டு செக் பண்ணிக்கிட்டு இருக்க நேரம் அந்த பக்கமா அந்த ஃபேமிலில உள்ள மூணு பேரும் (அப்பா, அம்மா, மகன்) போவாங்க.

அப்போ அங்க இருந்த இன்ஸ்பெக்டர் அந்த அவரை (அப்பா) இங்க வான்னு கூப்பிடுவாரு. அப்போ அவரு அவரோட பையன்கிட்ட அம்மாவை கூட்டிட்டு போ நான் வரேன்னு சொல்லி அனுப்பி வச்சிட்டு இன்ஸ்பெக்டர் கிட்ட போவாரு.

அப்போ அந்த இன்ஸ்பெக்டர் இடுப்புல என்ன வச்சிருக்கான்னு கேக்குறாரு. அதுக்கு அவரு சொல்றாரு "என்னோட புள்ளைய இங்கிலீஷ் மீடியம்ல படிக்க வைக்க என்னோட மொத்த சொத்தையும் வித்து 7 லட்சம் பணம் வச்சிருக்கேன்னு" சொல்லுவாரு. அந்த 7 லட்ச காசுக்கு ஆசைப்பட்ட அந்த இன்ஸ்பெக்டர் அவரை அங்கயே அடிச்சு கொலை பண்ணிட்டு, பணத்தை எடுத்துக்கிட்டு போறாரு.

ரொம்ப நேரமா அப்பாவை காணோம்னு அந்த அம்மாவும் மகனும் தேடுறாங்க. எவ்வளவோ தேடியும் கிடைக்காம போலீஸ் ஸ்டேஷன்ல போய் சொல்றாங்க. ஸ்டேஷன்ல இருந்த அந்த இன்ஸ்பெக்டர் அவங்களை அடிச்சு வெளிய போக சொல்றாங்க.

இவங்களும் என்ன பண்றதுன்னு தெரியாம நம்ம ஹீரோ தாஸ் கிட்ட வந்து சொல்றாங்க. ஹீரோவும் பணத்தோட வரேன்னு சொல்லிட்டு போவாரு. தாஸும் அவரோட நண்பர்களும் சேர்ந்து அந்த போலீஸை பிடிச்சு அடிச்சு காசை வாங்கிட்டு அந்த இன்ஸ்பெக்டரை அங்கயே சுட்டு போட்டுட்டு போறாங்க.

திருப்பமுனை

இதுக்கு நடுவுல வேற ஒரு போலீஸ் டீம் ஸ்மக்லிங் கேஸ்க்கு தாஸையும் அவரோட நண்பர்களையும் தேடிக்கிட்டு இருக்காங்க. அவங்ககிட்ட இருந்து தப்பிச்சு தாஸும் அவரோட நண்பர்களும் ஒரு ஹோட்டல்ல (பார்) தலைமறைவா இருக்காங்க.

அங்க பார்ல பாட்டு பாடுற பார்வதி (சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) அப்படின்னு ஒரு பொண்ணை பார்க்குறாரு. அந்த பொண்ணை அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போகுது. கொஞ்ச நாள் அங்க இருக்கும் போது அங்க இருந்து கிளம்பி ஆந்திரா பக்கம் போய் திருந்தி வாழ்வோம்னு முடிவு பண்ணி அங்க இருந்து கிளம்ப ஆரம்பிக்கிறாங்க.

அப்படி கிளம்பி போறதுக்கு முன்னாடி போலீஸ்கிட்ட யாரோ சொல்லிடுறாங்க தாஸும் அவரோட நண்பர்களும் அந்த ஹோட்டல்ல இருக்கிறத பத்தி. போலீஸும் அங்க வந்து அவங்களை சுத்தி வளைச்சிருவாங்க. அதுக்கப்பறம் தாஸ்க்கும் போலீஸ்க்கும் நடுவுல ஒரு பெரிய துப்பாக்கி சூடு நடக்கும்.

அந்த சண்டையில அந்த பாட்டு பாடுற (பார்வதி) பொண்ணுக்கு குண்டு அடிபட்டுரும். அந்த பொண்ணு உயிருக்கு போராடிக்கிட்டு இருக்க நேரம் ஹாஸ்பிடல் கொண்டு போலாம்னு ஒரு போலீஸ் ஆபிஸர் சொல்லுவாரு. ஆனா அந்த பெரிய போலீஸ் ஆபிஸர் அந்த பொண்ணை இன்னொரு தடவ சுட்டு கொன்னுடுறாரு. அதுக்கப்பறம் தாஸையும் அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போய் லாக்கப்ல வச்சு அடிக்கிறாங்க.

அதுக்கப்பறமா தாஸை என்கவுண்டர்ல கொலை பண்ண கூட்டிட்டு போறாங்க. அங்க இருந்த போலீஸ் ஆபிஸர் எல்லாரையும் சுட்டு போட்டுட்டு தாஸ் அங்க இருந்து தப்பிச்சு போய் அவரோட நண்பர்களோட சேர்ந்து ஆந்திரா போக ரெடி ஆகுறாரு.

அவரு ஆந்திரா போறதுக்கு முதல் அந்த ஃபேமிலிகிட்ட பணத்தை கொடுத்துட்டு, அந்த பார்வதி பொண்ணு சாவுறதுக்கு காரணமா இருந்தவனை (அதாவது தாஸும் அவரோட நண்பர்களும் தங்கியிருந்த ஹோட்டலை போலீஸ்கிட்ட சொன்னவனை) கொலை பண்ணிட்டு போவாலாம்னு முடிவு பண்றாரு.

அந்த நேரம் அவன் டெய்லி ஒரு இடத்துக்கு வருவான். அந்த இடம்தான் விபச்சாரம் பண்ற இடம். அதாவது சின்ன வயசு பொண்ணுங்களை கடத்திட்டு வந்து அவங்களை வித்து காசு பாக்குற இடம். அந்த இடத்துக்கு நம்ம தாஸ் வராரு. அங்க வந்து படத்தோட ரெண்டாவது ஹீரோயினைப் பார்க்குறாரு, அந்த பொண்ணுதான் (சந்திரா).

அந்த பொண்ணைப் பார்த்ததும் அவருக்கு பார்வதி நினைவு வந்துரும். அதுக்கப்பறம் பார்வதி கொலைக்கு காரணமா இருந்தவனையும் அங்க இந்தப் பொண்ணுங்களை வித்து காசு பார்த்தவங்களையும் கொலை பண்ணிட்டு அந்த பொண்ணையும் (சந்திரா) அங்க இருந்து கூட்டிட்டுப் போறாரு.

அதுக்கப்பறம் தாஸ் அந்த பணத்தை கொண்டுபோய் அந்த ஃபேமிலிகிட்ட கொடுத்தாரா இல்லையா? போலீஸ்கிட்ட இருந்து தப்பிச்சு ஆந்திரா போனாங்களா? அப்படின்றதை செம இன்ட்ரெஸ்ட்டாகவும் செம த்ரில்லிங்காகவும் சொல்லப் போறதுதான் படத்தோட மீதிக்கதை.

நடிப்பு

இந்தப் படத்தோட ஹீரோ லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற படங்களை டைரக்ட் பண்ணியிருக்காரு. இதுல கூலி தவிர மத்த எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கு. கூலி பட தோல்விக்கு பிறகு சோஷியல் மீடியால ட்ரோல் மெட்டீரியலா இருந்தாரு.

இப்போ இந்தப் படத்தோட  கதாநாயகனா அறிமுகம் ஆகியிருக்காரு. ஒரு ஹீரோவா இந்தப் படம் இவருக்கு நல்லா செட் ஆகியிருக்கு.

இருந்தாலும் இவரோட நடிப்புல பெருசா ஒரு இம்பாக்ட்டும் இல்ல. முகத்துல எந்த ஒரு எமோஷனல் ரியாக்‌ஷனும் இல்ல. படம் ஆரம்பத்துல இருந்து முடிவு வரைக்கும் ஒரே மாதிரிதான் முகத்தை வச்சிருக்காரு.

ஆனால் இவரோட ஃபைட் சீன் எல்லாம் சூப்பரா இருந்துச்சு, ஃபைட் சீன்ல அடி தூள் கிளப்பிட்டாரு லோகேஷ். ஒருவேளை இவரோட முதல் படம்ங்கிறதால கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கலாம் ஆனால் இனி வரப் படங்கள்ல தன்னை இன்னும் நல்லா மெருகேற்றி திரையில ஜொலிப்பாருன்னு ஒரு நம்பிக்கை இருக்கு.

இயக்கம் & இசை

அடுத்து இந்தப் படத்தோட இயக்குநர் அருண் மாதேஸ்வரன். இவரோட படங்கள்ல பொதுவா Voilence அதிகமா இருக்கும், இவரோட மற்ற படங்களை விட இந்தப் படத்துல Voilence கொஞ்சம் கம்மி. இவரு ராக்கி, கேப்டன் மில்லர் மாதிரி படங்களை இயக்கியிருக்காரு.

இவரோட கடைசியா வெளிவந்த தனுஷை வச்சு பண்ண கேப்டன் மில்லர் படத்துல எதை மிஸ் பண்ணாரோ அதை இந்தப் படத்துல செமையா பிடிச்சிருக்காரு. திரைக்கதையில கொஞ்சம் கூட சலிப்பு வரல செம இன்ட்ரெஸ்டிங்கா கொண்டு போயிருந்தாரு கதையை. இந்தப் படம் இவருக்கு பெரிய Milestone-னா அமைந்திருக்கு.

அடுத்து இந்தப் படத்தோட மியூசிக். மியூசிக் பத்தி சொல்லவே தேவையில்லை, அனிருத் பின்னி எடுத்துட்டாப்ல. இந்தப் படத்துக்கு அனிருத்தோட மியூசிக் பெரிய சப்போர்ட் பண்ணியிருக்கு. இந்தப் படத்துல ஒரு பிஜிஎம் வரும் அதே பிஜிஎம்மை மாஸாகவும் மெலடியாகவும் போட்டு மிரட்டி விட்டாரு அனிருத்.

முடிவுரை

இந்தப் படம் A சர்டிபிகேட் படம். படத்துல நிறைய பேட் வேர்ட்ஸ் யூஸ் பண்ணியிருக்காங்க அதுவும் நல்லாதான் இருக்கு. IMDb 8.5 ரேட்டிங் கொடுத்திருக்காங்க இந்தப் படத்துக்கு.

இந்தப் படத்தை 25 கோடி பட்ஜெட்ல தயாரிச்சிருக்காங்க. இப்போ உலகம் பூரா வெளியாகி 60+ கோடிகளுக்கு மேல வசூல் பண்ணி மாஸ் காட்டுது. கண்டிப்பா இது தியேட்டர்ல மிஸ் பண்ணக் கூடாத தரமான க்ரைம் த்ரில்லர் படம்.

No comments:

Post a Comment