தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் அவர்களின் 64வது படத்திற்கான மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இப்படத்தை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன.
ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்த அறிவிப்பு! 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகி ஒன்றரை வருடத்திற்கு மேலாகியுள்ள நிலையில், அஜித்தின் அடுத்த படத்திற்கான அப்டேட் எதுவும் வெளிவராமல் இருந்தது. இதனால் பெரும் ஏமாற்றத்திலும் கவலையிலும் இருந்த அஜித் ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்:
டைட்டில்: இப்படத்திற்கு “DARE DEVIL” என அதிரடியாகத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு: அஜித்தின் மனைவியான திருமதி. ஷாலினி அவர்கள் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இசை: வேதாளம், விடாமுயற்சி படங்களைத் தொடர்ந்து அனிருத் மற்றும் அஜித்குமார் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைகிறது.
ரிலீஸ் திட்டம்: 2026 செப்டம்பர் மாதம் ஷூட்டிங் ஆரம்பித்து, 2027-ல் ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
அஜித்தின் சினிமா பயணம்: மங்காத்தா முதல் விடாமுயற்சி வரை 1990-ஆம் ஆண்டு 'என் வீடு என் கணவர்' மூலம் அறிமுகமான அஜித், இதுவரை 63 படங்களை முடித்துள்ளார். தற்போதைய தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்டிருப்பவர் அஜித்.
2011-ல் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த 'மங்காத்தா', அஜித்தின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது. ஆனால், அதற்குப் பிறகு வந்த வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற படங்கள் கமர்சியல் ஹிட்டடித்தாலும், எச். வினோத் இயக்கத்தில் வந்த வலிமை, துணிவு மற்றும் மகிழ் திருமேனியின் 'விடாமுயற்சி' ஆகிய படங்கள் ரசிகர்களுக்குத் தேவையான முழுமையான தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கவில்லை.
ஆதிக் ரவிச்சந்திரனின் ஃபேன்-பாய் சம்பவம்! பில்லா, மங்காத்தா போன்ற மாஸ் படங்களை எதிர்பார்த்து ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த விருந்துதான் 'குட் பேட் அக்லி'.
கதை பழையதாக இருந்தாலும், வாலி, பில்லா, மங்காத்தா படங்களின் ரெஃபரன்ஸ் காட்சிகளை வைத்து அஜித்தை திரையில் விஸ்வரூபம் எடுக்க வைத்தார்.
பொதுவான ஆடியன்ஸை விட, அஜித் ரசிகர்களிடையே இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் சக்கை போடு போட்டது.
கார் ரேஸ் வதந்திகளும், விஜய்-யின் அரசியல் பிரவேசமும்! 'குட் பேட் அக்லி' வெளியாகி ஒன்றரை வருடங்களாக எவ்வித அப்டேட்டும் இல்லாததால், அஜித் முழுநேர கார் ரேஸில் ஈடுபடப் போவதாகவும் வதந்திகள் பரவின. இதற்கிடையே, அவரது கேம்போ பானத்தி மற்றும் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டன.
மறுபுறம், அஜித்தின் போட்டி நடிகரான விஜய், தனது கடைசி படமான 'ஜனநாயகன்' திரைப்படத்தைக் கொடுத்துவிட்டு, அரசியலில் மாபெரும் வெற்றி பெற்று இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக உருவெடுத்துள்ளார். இந்த நிலையில், அஜித்தும் தனது ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் ஹிட் படத்தைக் கொடுத்துவிட்டு ரேஸில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
எகிறும் எதிர்பார்ப்புகள்! இந்தச் சூழலில்தான் 'DARE DEVIL' அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உச்சகட்ட சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. 'திரிஷா இல்லனா நயன்தாரா', 100 நாட்கள் ஓடிய மெகா பிளாக்பஸ்டர் 'மார்க் ஆண்டனி', மற்றும் 'குட் பேட் அக்லி' போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் இந்தப் படத்திலும் தரமான சம்பவங்களைச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சினிமாவில் இருந்து விடைபெற்றுள்ள நிலையில், இரு தரப்பு ரசிகர்களுமே அஜித்தின் இந்த 'DARE DEVIL' படத்தைக் கொண்டாட ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்!



No comments:
Post a Comment