இன்னைக்கு நம்ம பிளாக்-ல எதைப் பார்க்கப் போறோம்னா, டாம் ஹாலந்து நடிப்பில் டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கத்தில் ஜூலை 31 அன்று உலகளவில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் “ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே” படத்தைப் பற்றிய முழு விமர்சனம் தான் இது.
இந்தப் படத்தோட கதை உங்களுக்கு முழுசா புரியணும்னா, இந்தப் படத்துக்கு முன்னாடி வெளிவந்த “ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்” கடைசி பாகத்தைப் பார்த்துவிட்டுத் தான் இந்தப் படம் பார்க்கணும். அப்படிப் பார்த்தால் தான் இந்தப் படத்தோட கதை புரியும்; ஏனெனில் அந்தப் படக் கதையோட தொடர்ச்சியாகத் தான் இந்தப் படம் வந்துள்ளது.
கதைச்சுருக்கம்
படத்தோட கதையைப் பார்த்தோம்னா, படத்தோட ஆரம்பத்தில் ஸ்பைடர் மேன் அதாவது நம்ம பீட்டர் பார்க்கர் நியூயார்க் நகரப் போலீசுக்கு எங்கேயாவது திருட்டு, கொலை அப்படின்னு தப்பு நடக்கும் போது முதலில் அங்கே போய் அந்தப் பிரச்சனையை முடித்துக்கொடுத்து ரொம்ப உதவியாக இருப்பார். இவர் உருவாக்கி இருக்கும் ஒரு சாதனம் எங்கேயாவது பிரச்சனை நடக்கப் போகுது அப்படின்னா உடனே கண்டுபிடித்து நம்ம ஸ்பைடர் மேனுக்கு எச்சரிக்கை செய்யும். அதன் மூலமாக அந்த இடத்திற்கு உடனடியாகப் போய் அந்தப் பிரச்சனையைத் தடுத்து நிறுத்துவார். சுருக்கமாகச் சொல்லப்போனால் நியூயார்க் நகரத்தோட பாதுகாவலனாக நம்ம ஸ்பைடர் மேன் இருப்பார். இதனால நியூயார்க் மக்கள் இவரைத் தங்களில் ஒருவராக நினைத்துக் கொண்டாடுவார்கள்.
கடைசி பாகத்தில் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் பீட்டர் பார்க்கர் தான் ஸ்பைடர் மேன் என்ற விஷயத்தை உலகத்திடம் இருந்து மறைத்துவிடுவார். அதனால அவருடைய காதலி MJ-க்கும் அவருடைய நெருங்கிய நண்பருக்கும் ஸ்பைடர் மேன் பீட்டர் பார்க்கர் என்பது மறந்து போயிருக்கும். அவரும் எத்தனையோ தடவை அந்த லெட்டரை எடுத்துக் கொண்டு ஹீரோயின் கிட்ட சொல்ல வருவார், ஆனால் ஹீரோயின் ரொம்ப சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதைப் பார்த்துவிட்டு அதைச் சொல்லாமல் அப்படியே கிளம்பிவிடுவார். இந்தப் படத்திலும் அப்படித்தான் ஒரு பார்ட்டிக்கு போயிட்டு அங்கே ஹீரோயினைப் பார்க்கிறார். அங்கே ஒரு சில விஷயங்கள் எல்லாம் நடக்கும், அதைப் பார்த்த பிறகு அவருக்கு ரொம்ப மன உளைச்சல் ஏற்படும்; இவரும் கவலையோடு அங்கிருந்து வந்துவிடுவார்.
அடுத்த காட்சியில் நம்ம ஹீரோ அவருடைய ஹீரோயின் மற்றும் அவருடைய நண்பர் கூட கடந்த காலத்தில் இருந்த நிகழ்வுகளை நினைத்துக் கொண்டே ரொம்ப மன கஷ்டத்தில் ஒவ்வொரு கட்டிடத்திற்கும் தாவிக்கிட்டுப் போற மாதிரி காட்டுவாங்க. அந்தக் காட்சி உண்மையாவே நல்லா இருக்கும், ரசிகர்களைக் கூட ரொம்ப feel பண்ண வச்சிருக்கும். இந்தக் காரணத்தினால் நம்ம ஹீரோவோட சூப்பர் பவர் நிலை தடுமாறிடும். அந்தப் பாதிப்பைக் கட்டுப்படுத்தப் புதிதாக ஒரு சாதனத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் நம்ம ஹீரோ.
பலம் வாய்ந்த வில்லன்
அடுத்து இந்தப் படத்தோட வில்லனைப் பார்த்தோம்னா, அவருக்கு ஒரு சூப்பர் பவர் இருக்கும். அதாவது கூடு விட்டுக் கூடு பாயும் சக்தி அவன்கிட்ட இருக்கும். அவனுக்குத் தேவையான ஒன்று “டேமேஜ் கண்ட்ரோல் டிபார்ட்மென்ட்டில்” இருக்கும், அதற்காக வில்லன் அங்கே வருகிறார். அதுவும் வில்லனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது; ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் மாறி மாறிப் புகுந்து அவங்க மனதைக் கட்டுப்படுத்தி தான் நினைத்ததைச் செய்யும் சக்தி அவன்கிட்ட இருக்கு.
அந்த வில்லன் யாருன்னு நம்ம பீட்டர் பார்க்கர் அதாவது நம்ம சூப்பர் ஹீரோ ஸ்பைடர் மேன் கண்டுபிடிக்குறார். ஸ்பைடர் மேன் அவளோட வழியில் குறுக்கே வர்றதால அவனைப் பழிவாங்க அவன் உயிருக்கு உயிராக நேசிக்கும் ஹீரோயினைக் கொல்வதற்காக வில்லன் முயற்சி செய்வான். இதற்கப்புறம் வில்லனிடம் இருந்து ஹீரோயினைக் காப்பாற்றினாரா? நியூயார்க் நகரத்தைக் காப்பாற்றினாரா? யாரு அந்த வில்லன்? அவனுக்குத் தேவையான என்ன பொருள் டேமேஜ் கண்ட்ரோல் ரூமில் இருக்கு? அப்படின்றது தான் மீதிக்கதை.
ஆக்ஷன் மற்றும் திரைக்கதை (பிளஸ் & மைனஸ்)
பொதுவாக மார்வெல் ஸ்டூடியோவில் எடுக்கும் ஸ்பைடர் மேன், அவெஞ்சர்ஸ் போன்ற படங்களில் கதையை விட அதில் வரும் ஆக்ஷன் காட்சிகளுக்குத் தான் மக்கள் அதிகமாக விரும்பி தியேட்டர் பக்கம் போவாங்க. ஹாலிவுட் ஆக்ஷன் படங்களில் வரும் சண்டைக் காட்சிகள் சும்மா தரமாக இருக்கும். உலகத்தரம் வாய்ந்த VFX எல்லாம் பயன்படுத்தி அருமையான ஒரு 3D அனுபவத்தைக் கொடுக்கும்.
அந்த மாதிரி இந்தப் படத்திலும் ஃபீல் வந்துச்சான்னு கேட்டா கண்டிப்பாக வந்துச்சு. ஆனால் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் ரொம்பவும் குறைவாகத் தான் இருக்கும்.
படம் தொடங்கி ஒரு கொஞ்ச நேரத்தில் ஒரு சண்டைக் காட்சி வரும், அந்தச் சண்டைக் காட்சி தரமாக இருக்கும்; நல்ல ஒரு 3D அனுபவத்தைக் கொடுக்கும்.
அப்புறம் மார்வெல் படங்களில் கேமியோவுக்குப் பஞ்சம் இருக்காது, அந்த மாதிரியே இந்தப் படத்திலும் ஒரு சூப்பர் ஹீரோவோட கேமியோ வரும். அந்தச் சூப்பர் ஹீரோவுக்கும் நம்ம ஸ்பைடர் மேனுக்கும் ஒரு சண்டைக் காட்சி வைச்சிருக்காங்க, அந்தச் சண்டைக் காட்சியும் சூப்பரா இருக்கும்.
கடைசியாக கிளைமாக்ஸில் Ninjaa சண்டைக் காட்சி ஒன்னு வரும், அது எல்லாம் தரமான செய்கை.
சொல்லப்போனால் படத்தில் ஒரு 3 சண்டைக் காட்சிகள் வரும், அந்த மூன்று காட்சிகளைத் தவிர மற்ற எதுவுமே பெருசாக நல்லா இருக்காது. இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இருக்கும்னு நம்பிப் போனவங்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான். ஹீரோ ஹீரோயினை எந்த அளவுக்கு லவ் பண்றாரு அப்படி இப்படின்னு ஒரு சில மொக்கையான காட்சிகளெல்லாம் வரும். அந்த மாதிரி காட்சிகளைத் தவிர்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் ஆக்ஷன் காட்சிகளைச் சேர்த்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.
நடிப்பு மற்றும் தொழில்நுட்பம்
இந்தப் படத்தில் என்னதான் ஆக்ஷன் காட்சிகள் குறைவாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தோம்னா இந்தப் படம் ரொம்ப strong. VFX, இசை, ஆக்ஷன், சண்டை எல்லாமே சூப்பராக வொர்க் அவுட் ஆகியிருக்கு. இந்தப் படத்தோட ஹீரோ டாம் ஹாலந்து, ஹீரோயின் செண்டயா மற்றும் சேடி சிங்க், ஜேக்கப் படலன் எல்லாருமே அவங்க அவங்களுடைய கதாபாத்திரத்தைச் சிறப்பாகப் பண்ணிட்டுப் போயிருக்காங்க. அவங்க நடிப்பில் எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது.
முதல் பாதி ஓரளவுக்கு நல்லா போச்சு, ஆனா இரண்டாம் பாதி ரொம்ப லேகா கொண்டு போயிட்டாங்க. ஒரு கட்டத்தில் வில்லனைப் பிடிச்சுட்டாங்க, படம் முடியப்போகுதுன்னு எதிர்பார்த்தா அங்கேருந்து இன்னொரு ட்விஸ்ட்டோட கதையைக் கொண்டு போறாங்க. ஆனா அந்தத் திரைக்கதை அங்கே செட் ஆகலன்னு தான் சொல்லணும். திரைக்கதை விஷயத்தில் நம்ம இயக்குனர் டெஸ்டின் டேனியல் சொதப்பிட்டாரென்று தான் சொல்லணும்.
பாக்ஸ் ஆபீஸ் சாதனை
இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் மிரட்டிக்கிட்டு வருது.
இதுவரைக்கும் உலகம் முழுவதும் 932 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் பண்ணி இருக்கு.
இந்தியாவில் மட்டும் முதல் நாள் 72 கோடி வசூல் பண்ணி இருக்கு, இரண்டாவது நாளிலேயே 132 கோடி வசூல் ஆகி இருக்கு. இன்னும் ஒரு 10, 15 கோடி வசூல் ஆச்சுன்னா கிறிஸ்டோபர் நோலனோட ஒடிஸி படத்தோட (146 கோடி) வசூல் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது. கலவையான விமர்சனங்கள் நிறைய இடத்திலிருந்து வந்தாலும் இன்னும் ஹவுஸ் ஃபுல்லா தான் இந்தப் படம் ஓடிக்கிட்டு இருக்கு.
RK Movie Talkies தீர்ப்பு
கண்டிப்பாக இந்தப் படத்தைக் குடும்பத்தோட தியேட்டரில் போய் பார்க்கலாம். திரைக்கதை சொதப்பலினாலும் தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் பலமானது தான். அப்புறம் குழந்தைகளும் இந்தப் படத்தை ரொம்ப என்ஜாய் பண்ணிப் பார்ப்பாங்க. இந்த வீக் எண்டில் போய் பார்க்க வேண்டிய தரமான படம் தான் இந்த “ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே”.



No comments:
Post a Comment